சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Rupa

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Rupa

Air service again in Salem! The information released by the Union Minister of Aviation!

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் 2021 ஜூன் 02 தேதியிலிருந்து சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரை பலமுறை நேரில் சந்தித்ததாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதை சுட்டி காட்டினார். ஆனால் இன்று வரை விமான சேவையை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் சேலம் விமான நிலையத்திலிருந்து, விமான சேவை எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு அவையில் பதில் அளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா சேலம் விமான நிலையத்திலிருந்து சேவை தொடங்குவதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது எனவும் அதன் அடிப்படையில் விமான சேவை தொடங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.