மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

0
102
The husband who punched his wife! The court's action verdict!
The husband who punched his wife! The court's action verdict!

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (31). இவர் கூலி  தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் அந்த வகையில் வழக்கம்போல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கனகராஜ்யின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நந்தினி அந்த பகுதியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள வட்டார பிளான்ட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நந்தினி வேலை செய்யும் இடத்திற்கு குடிபோதையில் கனகராஜ் சென்று தகராறு செய்துள்ளார். அந்த தகராறில் ஆத்திரமடைந்த கனகராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால்  நந்தினியை சரமாரியாக குத்தினார். அந்த தாக்குதலில் நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த விசாரணையில் கனகராஜ் கைது செய்யப்பட்டார். அவரின் மேல் மதுக்கரை போலீசார் கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிசா ஆஜராகி வாதாடினார். மேலும் மனைவியை இரக்கமில்லாமல் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது அந்த பெண்ணின் பெற்றோருக்கும் உறவினருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.

author avatar
Parthipan K