ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை! முழு விவரங்கள் இதோ!
மொபைல் போன்கள் முதன் முதலில் வந்த காலத்திலிருந்து ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், பிஎஸ்என்எல், டொகோமோ போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இருந்து வந்தது. முதன்மை வாய்ந்ததாக ஏர்டெல் தான் திகழ்ந்து வருகிறது. காரணம் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் சிம்மை தான் பயன்படுத்துகிறார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் தான் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கென டேட்டா ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் நிலை ஏற்படும்.
மேலும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், நாட்டில் அதிக பயனர்களைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. நிறுவனம் சந்தாதாரர்களுக்கு கூடுதல் நன்மைகளுடன் ஏர்டெல் ரீசார்ஜ் பிளான் வித் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் எனும் ரீசார்ஜ் திட்டங்கள் வகுத்துள்ளது.
இந்த திட்டங்களில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மட்டுமின்றி பிற சேவைகளை கிடைக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி நன்மைகளுடன், ஏர்டெலின் பிரத்யேக சேவைகளுக்கான இலவச அணுகல்களும் வழங்கப்படுகின்றன.
அதில் முதலாவதாக ரூ.499 ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை பயனர்களுக்கு கிடைக்கும். 28 நாள்களுக்குச் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.
தொடர்ந்து 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் இலவச விங் மியூசிக் ஆகியன கூடுதல் நன்மைகளாக உள்ளன.
அதில் முதலாவதாக ரூ.399 ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை பயனர்களுக்கு கிடைக்கும். 28 நாள்களுக்குச் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு மூன்று மாதங்களுக்கு கிடைக்கும்.
மேலும், 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் இலவச விங் மியூசிக் ஆகியன கூடுதல் நன்மைகள் வழங்கப்படும்.
ஏர்டெல் 359 ரீசார்ஜ் திட்டம் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளுடன் 28 நாள்கள் வேலிடிட்டியும் கிடைக்கும்.
இதனுடன் 28 நாள்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கான அணுகல் வழங்கப்படுகிறது.