‘தினேஷ் கார்த்திக் என் அருகில் உட்கார்ந்து கமெண்ட்ரி செய்யலாம்… அணியில்?’ – முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!

0
226

‘தினேஷ் கார்த்திக் என் அருகில் உட்கார்ந்து கமெண்ட்ரி செய்யலாம்… அணியில்?’ – முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார்.

2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் கார்த்திக் அற்புதமான திருப்புமுனையைப் பெற்றுள்ளார். RCB அணிக்காக பின் வரிசையில் சிறப்பான பேட்டிங் செய்ததன் மூலம் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார். இதையடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டிகளில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து தினேஷ் கார்த்திக் தற்போது ஆசியக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்  உலகக்கோப்பை டி 20 அணியிலும் இடம்பெறுவார். இந்நிலையில் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் “அவரை என் அருகில் அமர்ந்து கமெண்ட்ரி செய்யவே நான் தேர்ந்தெடுப்பேன். ஆனால் அணியில் விளையாட அவர் சரியான வீரர் இல்லை” என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

Previous article“ஏன் அஸ்வினை அணியில் எடுக்கிறார்கள்… ஆச்சர்யமாக உள்ளது” முன்னாள் வீரர் அதிர்ச்சி கருத்து
Next articleகூட்டணியில் இருந்து திடீரென நிதீஷ்குமார் விலகல்! பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here