கூட்டணியில் இருந்து திடீரென நிதீஷ்குமார் விலகல்! பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்!

0
64

பாஜக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேவையான பெருன்பான்மை பலமில்லாத நிலையில், கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருப்பது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியமைத்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தது. நேற்று முன்தினம் வெளியேறிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், போன்ற எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் திடீரென்று வெளியேறியிருப்பது எதிர்வரும் நாட்களில் தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும், உண்டாக்க கூடும். இருந்தாலும் கூட உடனடியான தாக்கம் ராஜ்யசபாவில் தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், அங்கே ஆளும் பாஜகவிற்கு பெரும்பான்மை பலமில்லை என சொல்லப்படுகிறது.

கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்தாலும் ராஜ்யசபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை பலமில்லை. இதன் காரணமாக, தோழமைக் கட்சிகளின் தயவில் தான் பாஜக அங்கு செயல்பட்டு வருகிறது. மசோதாக்களை லோக்சபாவில் மிக எளிதாக நிறைவேற்ற முடியும். பாரதிய ஜனதா கட்சியால் ராஜ்ய சபாவில் கணக்கு போட்டு மற்ற கட்சிகளிடம் பேசி சமாதானப்படுத்தி அதன் பிறகு தான் நிறைவேற்றப்படுகிறது. ராஜ்யசபாவின் தற்போதைய பலம் 237 இடங்கள். ஜம்மு காஷ்மீருக்கான 4 இடங்கள், திரிபுராவுக்கான 1 நியமன இடங்களுக்கான 3 என ஒட்டு மொத்தமாக 8 இடங்கள் காலியாக இருக்கின்றன.

ராஜ்யசபாவில் மசோதாக்களை எந்த விதமான சிக்கலுமில்லாமல் நிறைவேற்றுவதற்கு 119 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அது இல்லை என்பதால் பிஜு ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், உள்ளிட்ட 2 கட்சிகளின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுகவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்து தான் பாஜக ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.

கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1 சுயேட்சை மற்றும் 5 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்த்தாலும் ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 114 ஆக தான் இருக்கிறது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து திடீரென்று விளங்கியிருக்கிறது. அந்த கட்சிக்கு ராஜ்யசபாவில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஸ் நாராயணன் சிங்கும் அடக்கம் என சொல்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிருக்கிறது. ஆகவே ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் ௧௦௯ என குறைந்திருக்கிறது. பெரும்பான்மை பலத்திற்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா உடைந்ததிலும் பலனில்லை காரணம் சிவ சேனாவின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே உத்தவ் தாக்கரே அணியில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

அதாவது குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னர் அந்த கட்சி மீதமிருக்கும் 3 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும். மிக விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கின்ற திரிபுராவில் வெற்றி நிச்சயம் என்பதால் பாஜகவிற்கு அங்கிருந்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைப்பார். ஆகவே வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்தாலும் ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அடுத்த 1 வருடத்திற்கு 113 ஆக மட்டுமே இருக்கப்போகிறது.

இதுதான் பாஜகவிற்கு சற்று பின்னடைவாக காணப்படுகிறது, ஆகவே ராஜ்யசபாவில் மசோதாக்கள் நிறைவேற்றத்திற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், அதிமுக, பிஜு ஜனதா தளம், என தோழமைக் கட்சிகளை அதிகம் சார்ந்திருக்கும் சூழ்நிலை பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.