அஜித் 61 படப்பிடிப்பில் திடீர் மாற்றம்… சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங்!

0
189

அஜித் 61 படப்பிடிப்பில் திடீர் மாற்றம்… சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங்!

அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அஜித் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கிய ஹெச் வினோத், அவர் ஐரோப்பா சுற்றுலா சென்றதால் சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்த காட்சிகளில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடிபகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் வினோத்.

இந்நிலையில் இப்போது அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியுள்ள நிலையில் ஐதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் இப்போது ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு ஸ்ட்ரைக் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர் புனேவில் இறுதி கட்ட படப்பிடிப்பு புனேவில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

Previous articleஉயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..
Next articleபொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!