பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

0
159
For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!
For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின்,யில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பெரிதும் பயனுள்ளதாக அமையும் எனவும் கூறினார். மேலும் சோனி இந்தியா சாப்ட்வேர் சென்டர் இந்த பயிற்சியில் முன்னிலையில் வகிக்கும் 15 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் எனவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து பிறவர்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் மீதமுள்ள மாணவர்களுக்கு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இதர நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரும் எனவும் கூறியுள்ளனர். அதனையடுத்து நேர்முகாணலுக்கு பிறகு எழுத்து தேர்வு ஒன்று நடைபெறும் அதில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பயிற்சி திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி அனைத்தையும்  வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறினார்.

author avatar
Parthipan K