வட சென்னையில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

0
160

வட சென்னையில் ‘அஜித் 6’ படப்பிடிப்பு… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படத்தை இயக்குனர் H வினோத் இயக்கி வருகிறார்.

தற்போது H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக கூறுகின்றனர். அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிக மரியாதை கொண்டுள்ளதனால் இந்த தேதியில் தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஒப்புக்கொண்டார். தற்போது அஜித் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதனால்  இப்போது சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் வினோத் படமாக்கி வருகிறார். இந்த காட்சிகளில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரோடு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அதையடுத்து இப்போது சென்னை காசிமேடு மீன்பிடிபகுதிகளில் படப்பிடிப்பௌ நடத்தி வருகிறார் இயக்குனர் வினோத். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Previous articleநூதன முறையில் மோசடி செய்யும் ஹேக்கர்கள்! பொதுமக்களே உஷார்!
Next articleநீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!