மாஸான லுக்… மாஸான டைட்டில்… தீப்பிடித்த சமூகவலைதளங்கள்… வைரலாகும் அஜித் 61 போஸ்டர்

Photo of author

By Vinoth

மாஸான லுக்… மாஸான டைட்டில்… தீப்பிடித்த சமூகவலைதளங்கள்… வைரலாகும் அஜித் 61 போஸ்டர்

Vinoth

மாஸான லுக்… மாஸான டைட்டில்… தீப்பிடித்த சமூகவலைதளங்கள்… வைரலாகும் அஜித் 61 போஸ்டர்

அஜித் நடித்துவரும் அவரின் 61 ஆவது படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இவர்கள் கூட்டணியில் உருவான வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் செய்த குறும்பு ரகளைகள் உலகப் புகழ்பெற்றவை. பிரதமர், முதல்வர் வரை இங்கிலாந்து கிரிக்கெட் மைதானம் என எங்கு போனம் “வலிமை அப்டேட்” கேட்டு கையில் பேனர்களோடு சுற்றி வந்தனர். ஒருவழியாக அந்த படம் ரிலீஸ் ஆகி மூன்றாவது “AK 61” படத்தின் ஷூட்டிங்கும் இப்போதும் பெரும்பாலான அளவில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் படத்தின் டைட்டிலையாவது அறிவியுங்கள் எனக் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்காக இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. சினிமா உலகை சேர்ந்தவர்களும் அதை உறுதிப் படுத்தினர்.

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்போது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு துணிவு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கையில் துப்பாக்கியோடு அஜித் மாஸாக இருக்கும் புகைப்படத்தோடு கூடிய போஸ்டரும் வெளியாகி இப்போது வைரல் ஆகிவருகிறது.