விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!!

0
104

விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!!

தமிழ் திரைப்படத்துறையில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அவர்கள் இதுவரை தமிழில் 61 படங்கள் நடித்துள்ளார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான படம் ‘துணிவு’. இப்படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று இப்படத்தின் அதிகாரபூர்வ பெயரை படக்குழு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து விடாமுயற்சி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் படக்குழு தரப்பில் இருந்தது வராத காரணத்தினால் அஜித் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும்,படம் பிரமாண்டமாக எடுக்கப்பட இருப்பதாகவும் இப்படத்தை தயாரிக்க உள்ள லைக்கா நிறுவனம் சமீபத்தில் இதுகுறித்த தகவலை அறிவித்தது.இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அஜித் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதில் அஜித் வெள்ளை சட்டையுடன் கூலர்ஸ் அணிந்து கெத்தாக,அரசியல்வாதிகள் போல் தோற்றம் கொண்ட இருவர் மத்தியில் நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.இதனால் அஜித் அடுத்து அரசியலில் குதிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. காரணம் அஜித் கடந்த காலங்களில் அரசியல் குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் வெளிப்படுத்தியதில்லை.

இந்நிலையில் தற்பொழுது அரசியல்வாதிகள் போல் காணப்படும் நபர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் தல அரசியலில் நுழைய போகிறார் என்று இணையத்தில் கருத்து தெரிவித்து தெறிக்கவிட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளி வந்த நிலையில் தற்பொழுது இந்த போட்டோவை வைத்து அஜித்தும் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.