நடிகர் அஜித் அவர்கள் சினிமா துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து தனக்கு மிகவும் பிடித்த துறையான ரேசிங் துறையில் தற்போது பல சாதனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேசிங்கில் அஜித் கார் ரேசிங் அணியானது 3 வது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. மீண்டும் அதே போன்ற ஒரு பெருமையை அஜித் கார் ரேசிங் அணி வழங்கி இருக்கிறது.
நேற்று மார்ச் 23 அன்று இத்தாலி நாட்டில் நடந்த 2H OF MUGELLO CAR என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித் கார் ரேசிங் அணியானது மீண்டும் 3 வது இடத்தை பிடித்து இந்தியாவின் பெருமையை மற்றுமொரு முறை நிலைநாட்டியிருக்கிறது. அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி குறித்து ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் நடிகர் அஜித் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இரண்டாவது முறையாக கார் ரேசிங்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நடிகர் அஜித் அவர்கள் மேடைகள் என்று இந்திய தேசியக் கொடியை அசைக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் அவர்கள் சினிமாவில் எவ்வளவு ஈடுபாடுடன் இருக்கிறாரோ அதைவிட அதிக அளவு தனக்கு மிகவும் விருப்பமான ரேசிங் துறையில் ஈடுபாடுடன் இருப்பதற்கான பலனாக இன்று இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாகவும் குறிப்பாக தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் விதமாகவும் இரண்டாவது முறையாக வெற்றி அடைந்திருக்கிறார்.
குறிப்பு :-
இயக்குனர் ஆதிக் ரவி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அட்லி திரைப்படம் ஆனது திரையிடப்படுவதற்கான அனைத்து பணிகளையும் திரைப்பட குழு மேற்கொண்டு வருவதாகவும் கார் ரேஸ் வெற்றியோடு சேர்த்து குட்பேட் அக்லி திரைப்படத்தையும் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராக வேண்டும் என்றும் குட் பாட அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.