விசாகப்பட்டணம் புறப்பட்ட அஜித்… பேருந்தில் பயணம் செய்யும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

0
286

விசாகப்பட்டணம் புறப்பட்ட அஜித்… பேருந்தில் பயணம் செய்யும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகர் அஜித் விமான நிலையப் பேருந்தில் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அஜித் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கிய ஹெச் வினோத், அவர் ஐரோப்பா சுற்றுலா சென்றதால் சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்நிலையில் இப்போது அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியுள்ள நிலையில் விசாகப் பட்டணத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் அஜித் தற்போது விசாகப்பட்டணத்துக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் விமான நிலையப் பேருந்தில் அஜித் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே பகுதியில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளதாம். இதே போல 11 ஆண்டுகளுக்கு முன்னர் மங்காத்தா மற்றும் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங் அருகருகே நடந்த போது விஜய், அஜித் இருவரும் சந்தித்தனர். அதுபோல இப்போதும் இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous articleஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய பவுலர்!
Next articleஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here