உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அஜித் ரசிகர்!!

Photo of author

By Parthipan K

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அஜித் ரசிகர்!!

Parthipan K

ajith-fan-made-the-whole-world-turn-towards-him

தமிழ் திரை உலகத்தின் மாபெரும் நடிகர், தல என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமார் தற்போது வலிமை எனப்படும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த பல நாட்களாகவே வலிமை படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வராததால் அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று ஹேஸ்டேகை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாக வைத்திருந்தனர்.

ரசிகர்கள் வலிமை அப்டேட் என்ற பதங்களை கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு செல்வது, கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களிடம் வலிமை அப்டேட் பற்றி கேட்பது இன்ஸ்டாகிராம் பிரபலங்களிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்பது என வலிமை அப்டேட்டை வேற லெவல் ட்ரெண்டுக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹாஷிம் அம்லாவை கூட விட்டு வைக்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் அவர்கள் பீல்டிங் செய்யும் பொழுது அவர்களிடமும் வலிமை அப்டேட் குறித்து கேட்டு அதனை மிகப்பெரிய வைரல் ஆக்கினர்.

இந்நிலையில் அஜித்தின் அகில உலக ரசிகர் ஒருவர் யூரோப்பில் நடந்த யூரோ ஃபுட்பால் டோர்னமெண்டில் வலிமை அப்டேட் என்ற பதக்கத்தை வைத்தபடி உள்ள புகைப்படம் ஒன்று உலகளவில் ட்ரெண்டாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் வலிமை படக்குழுவிடம் இருந்து வந்த தகவலின்படி ஜூலை 15ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கப்போகிறது.