மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் !

0
89
Jewelry employee who targets and steals a forgotten card! Wi-Fi ATM!
Jewelry employee who targets and steals a forgotten card! Wi-Fi ATM!

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் !

திருடுபவர்கள் எப்படியும் திருடி கொண்டு தான் இருப்பார்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருப்பவர்களை நாம் என்ன செய்வது, அவர்களை ஒன்றுமே செய்ய இயலாது. அவர்களாக பார்த்து திருந்தாத வரை எதுவுமே நாம் செய்ய இயலாது. தொலைக்காட்சி விளம்பரங்களில் நாம் பார்த்திருப்போம். டப் டு விசா என்று ஆனால் அது தற்போது இந்த மாதிரி திருடர்களுக்கு உதவியாக போய்விட்டது.

அப்படி ஒரு செய்தி சென்னையில் நடைபெற்றுள்ளது. அதை பார்க்கலாம் வாருங்கள். சென்னையில் கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்தவர் மனோகர். 32 வயதான இவர் அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சின்மயா நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து விட்டு, எனது வைபை ஏடிஎம் கார்டை மறந்துவிட்டு சென்று விட்டேன்.

அதன் பிறகு தவறவிட்ட கார்டை பயன்படுத்தி ரூ.25000 வரை எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது ஏடிஎம் கார்டை மீட்டு தரும்படி கூறியிருக்கிறார். அதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்த இடத்தை ஆய்வு செய்தபோது, அது கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்டது என தெரிய வந்தது.

உடனே தனிப்படை போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தபோது ஒரு வாலிபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வைபை கார்டு மூலம் ஐந்தாயிரம் என பலமுறை எடுத்துச் சென்றதாகவும், அதன் காரணமாக அவர் மீது சந்தேகமாக இருந்ததால், அந்த வாலிபரின் புகைப்படத்தை எடுத்து வைத்திருப்பதாகவும், அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தையும் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த 39 வயதான நபர் மணிகண்டன் என்பதும் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, சவுகார் பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடை மற்றும் நகை பட்டறைகளில் வேலையும் செய்து வருகிறார், என்ற விவரங்கள் அறிந்தனர்.

ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்கள் ஞாபக மறதி காரணமாக தவறவிட்டு செல்லும் வாய்ப்பை பயன்படுத்தி வைபை கார்டுகளை மட்டும் குறிவைத்து, திருடி இதுபோல் பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இந்த கார்டுகளில் ரகசிய குறியீட்டு எண் இல்லாமல் ரூ.5000 வரை எடுக்கலாம் என்பதால், பெட்ரோல் நிலையத்தில் அவசர தேவை என கெஞ்சுவது போல் நடித்து பணத்தை பெற்று கொண்டு சென்றுள்ளார். மணிகண்டனிடம் இருந்து ஆறு இதேபோல் ஆறு வைபை ஏடிஎம் கார்டுகள் மற்றும் 25000 பணத்தையும் சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

எனவே மக்களே, டெக்னாலஜி வளர வளர இந்த மாதிரி கண்ணுக்கு தெரியாத திருடர்களும் கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்து கொண்டுதான் உள்ளனர். உஷார் மக்களே!