அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி! பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!!

0
94

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி! பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!!

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு அறிவித்து சில கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்கனவே டெல்லியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அந்த மாநில அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியிருக்கும் இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை வெளியிடுவது குறித்தும் அப்படி வெளியிட்டால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்பது குறித்தும் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே பொங்கல் பண்டிகைக்கு வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

author avatar
Parthipan K