லோகேஷ் கனகராஜ் –ன் அடுத்த திரைப்படத்தில் அஜித்? இணையத்தில் பரவும் புதிய அப்டேட்!!

0
36
Ajith in Lokesh Kanagaraj's next film? New update going viral!!
Ajith in Lokesh Kanagaraj's next film? New update going viral!!

லோகேஷ் கனகராஜ் –ன் அடுத்த திரைப்படத்தில் அஜித்? இணையத்தில் பரவும் புதிய அப்டேட்!!

தமிழ் திரையுலகில் தற்போது கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனர் தான் லோகேஷ் கனராஜ் ஆவார். இவரின் அனைத்து படங்களுமே ஒரு வித்தியாசமான கதைக் களத்தில் ரசிகர்கள் விரும்பும் படி உள்ளது.

இவரின் அனைத்து திரைப்படங்களுமே ஹிட் அடித்துள்ளது. இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் என அனைத்துமே மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

இந்த அனைத்து படங்களுமே குறுகிய நாட்களிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவர இருக்கின்ற லியோ படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.ஒரு பக்கம் தளபதி மற்றொரு பக்கம் இயக்குனர் கனகராஜ் என்று இவர்களின் காம்போவை பார்க்க அனைவரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்த லியோ படத்தை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ வைத்து அடுத்த படம் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் குறித்து எந்த அறிவிப்பும் இது வரை வெளியிடப்படவில்லை.

அதேப்போல இவரின் வெற்றிப்படங்களில் ஒன்றான கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அந்த வகையில், தற்போது இவர் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கே வந்திருந்த ரசிகர்கள் இவரிடம் பல கேள்விகளை கேட்டு வந்தார்கள்.

அதில் ஒருவர் தல அஜித்தை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து படம் எடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அதை பயன்படுத்தி கொள்வேன் என்று அவர் ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் தற்போது ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

author avatar
CineDesk