காதல் தோல்வியால் அஜித் குமாரின் தம்பி எடுத்த முடிவு!! இப்போ எப்படி இருக்காங்க!!

0
12
Ajith Kumar's brother's decision due to love failure!! How are you now!!
Ajith Kumar's brother's decision due to love failure!! How are you now!!

நடிகர் அஜித் குமாரின் தம்பி ஆகிய அனில் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது வாழ்வில் நடந்த சில விஷயங்கள் குறித்தும் அதனால் தான் கற்றுக் கொண்டு தத்துவங்கள் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

Youtube சேனலுக்கு பேட்டி அளித்த அனில் குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

நடிகர் அஜித் குமாரின் தம்பி அனில்குமார் அவர்கள் ஐஐடியில் படித்து முடித்த பின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் அவருடைய முதல் காதல் திருமணமானது வெற்றி பெறவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் காதல் குறித்து தெரிவிக்கையில், தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளின் பெயர்கள் வரை முடிவு செய்து வைத்திருந்த நிலையில் தன்னுடைய காதலி தன்னை விட்டு சென்று விட்டார் என்றும் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய காதலி தன்னை பிரிந்து சென்ற பொழுது கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் அந்த கணமே என்னை நான் சுட்டுக் கொண்டு இருந்திருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது யாராவது ஒரு 21 வயது பையன் காதல் தோல்விக்காக தற்கொலை செய்யப் போகிறேன் என்று கூறினால் அவனுடைய கன்னத்தில் அறைந்து வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு தோல்வியா எனக்கு ஊறி அவனுக்கு அறிவுரை கூறுவேன் என தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய தற்கொலை முடிவுக்கு பின் தான் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் காதல் தோல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை என்றும் புரிந்து கொண்ட அனில் குமார் அவர்கள் இது குறித்த காதல் தோல்வி அடைந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் காதல் தோல்வி என்பது முடிவல்ல என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

Previous articleமின் கட்டணத்தை குறைக்க எளிமையான 3 வழிகள்!!
Next articleஒரே தேசம்.. ஒரே மாணவர் ஐடி!! புதிய கல்விக் கொள்கை!!