நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருந்த விலக்கி அக்டோபர் மாதம் வரை கார் ரேசிங்கில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தது முதல் இன்று வரை இந்தியாவிற்காக கோப்பைகளை வென்று குவித்து வருகிறார். அந்த வகையில் பெல்ஜியம் இல் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணி 2 நமது இடத்தை பிடித்து வெற்றி கண்டுள்ளது.
இது குறித்த அஜித்குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி :-
கார் ரேசிங்கிற்காக துபாயில் பயிற்சி மேற்கொண்டு அங்கு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அஜித் ரேசிங் அணியானது 3 அவரது இடத்தைப் பெற்று இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்ததோடு அதனை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3 அவரது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத்தாலியில் இருந்து பெல்ஜியம் வந்து கார் ரேசிங்கில் கலந்து கொண்ட அஜித் கார் ரேசிங் அணி ஆனது மீண்டும் 2 நமது இடத்தை பெற்று வெற்றி இடத்தில் முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
துபாயில் நடைபெற்ற போட்டியானது 24 மணி நேர போட்டி மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டி 12 மணி நேர போட்டியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே கார் ரேசிங்கள் மட்டுமே கவனம் செலுத்து வரக்கூடிய நடிகர் அஜித்குமார் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான பொழுது கூட தான் ஒரு நடிகர் என்ற விதத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் கொடுக்காமல் தன்னுடைய கார் ரேசிங்கில் மட்டுமே முழுவதுமாக செயல்பட்டு வந்தார் தற்பொழுது அதற்கான பலனையும் அடைந்திருக்கிறார்.
தன்னுடைய கவனம் முழுவதையும் கார் ரேசிங்கில் செலுத்தி வந்த நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு தற்பொழுது மீண்டும் ஒரு வெற்றி கிடைத்திருப்பது மிகப்பெரிய கொண்டாட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது கார் ரேசிங்கில் மீண்டும் மீண்டும் கோப்பைகளை குவிப்பது இந்தியாவிற்கு பெருமையை அளிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.