சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல்

Photo of author

By Vinoth

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல்

Vinoth

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல்

அஜித் நடிப்பில் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா.

சிறுத்தைப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

சமீபத்தில் அஜித் இப்படி ஒரு இயக்குனரோடு தொடர்ந்து நான்கு படங்கள் இணைந்து பணியாற்றியது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அஜித்தோடு கடைசியாக இணைந்த விஸ்வாசம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவோடு இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டார். இவர்கள் கூட்டணியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார்.

இந்நிலையில் சிறுத்தை சிவா பற்றி பேசியுள்ள நடிகர் கார்த்தி “ சிறுத்தை சிவா மிகவும் இனிமையான இயக்குனர். நான் நடித்த ராக்கெட் ராஜா சிறப்பாக வருவதற்கு அவர்தான் காரணம். சினிமாவை காதலிக்கும் ஒரு நபர் அவர். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர். இதனால்தான் அஜித் தொடர்ந்து சிவாவோடு இணைந்து தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.” எனப் பேசியுள்ளார்.