துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!

Photo of author

By Vinoth

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!

Vinoth

Updated on:

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!

அஜித் சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கு இடையில் அஜித் பைக் டூர் மற்றும் துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குதல் என தனது நாட்களை கழித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் அவர் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இதையடுத்து அவரைப் பார்க்க அங்கு அவரைப் பார்க்க ரசிகர்கள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ரசிகர்களை அஜித் சந்தித்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் இப்போது அந்த போட்டியில் அஜித்தின் அணியின் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது. இது சம்மந்தமான தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.