துணிவு வாரிசு பொங்கலில் மோதப்போவது உறுதி… தமிழ் சினிமா பிரபலம் வெளியிட்ட தகவல்!

0
224

துணிவு வாரிசு பொங்கலில் மோதப்போவது உறுதி… தமிழ் சினிமா பிரபலம் வெளியிட்ட தகவல்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்க்ய் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக அஜித்தின் பட பெயர்கள் வீரம், விவேகம், வலிமை என வைக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட அதே பொருள் கொண்ட துணிவு என்ற டைட்டில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

ஆனால் துணிவு போல இல்லாமல் விஜய்யின் வாரிசு திரைப்படம், திட்டமிட்டது போல சென்றுகொண்டிருக்கிறது. முதல் லுக் போஸ்டரின் போதே 2023 பொங்கல் வெளியீடு என அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸாகும் என சில தகவல்கள் பரவின. ஆனால் இரண்டு பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்ற தகவலும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதிதான் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

மேலும் துணிவு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும், வாரிசு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleமுதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை!
Next article14-10-2022- இன்றைய ராசி பலன்கள்!