இந்த உண்மை சம்பவத்தைத் தழுவிதான் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உருவாகிறதா?

Photo of author

By Vinoth

இந்த உண்மை சம்பவத்தைத் தழுவிதான் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உருவாகிறதா?

Vinoth

இந்த உண்மை சம்பவத்தைத் தழுவிதான் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உருவாகிறதா?

அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு துணிவு என்ற தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்நிலையில் நேற்று மாலை படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக அஜித்தின் பட பெயர்கள் வீரம், விவேகம், வலிமை என வைக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட அதே பொருள் கொண்ட துணிவு என்ற டைட்டில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் படம் வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என ஏற்கனவே பல தகவல்கள் பரவிய நிலையில் இப்போது 1987 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த ஒரு நிஜ வங்கிக் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் திரைக்கதையை ஹெச் வினோத் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த வங்கிக் கொள்ளையில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படாமல் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.