சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையைப் படைத்த ஒரே அணி இந்தியாதான்!

0
278

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையைப் படைத்த ஒரே அணி இந்தியாதான்!

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 208 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு ஆசியக் கோப்பை தொடரும், தற்போது நடந்து வரும் ஆஸி அணிக்கு எதிரான டி 20 தொடரும் சிறு முற்றுப்புள்ளியை வைத்துள்ளன. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இரு தினங்களுக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இலக்கை இந்திய அணி கோட்டை விட்டு தோல்வியை தழுவியது.

டி 20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்தும் முதலில் பேட்டிங் செய்த அணி தோற்பது மிகவும் அரிதானது.  ஆனால் சொந்த மண்ணில் இந்திய அணி மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணமாக தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி 20 போட்டியிலும் இந்திய அணி 211 ரன்கள் சேர்த்தபின்னரும் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் சேர்த்தும் தோற்ற ஒரே அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

Previous articleஇந்த உண்மை சம்பவத்தைத் தழுவிதான் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உருவாகிறதா?
Next articleபாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here