தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!

0
40
Ajith turns into a quality villain!! Sema treat for fans this year!!
Ajith turns into a quality villain!! Sema treat for fans this year!!

தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்  துணிவு. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில்  போதிய அளவு வசூல் பெறாத நிலையில் அஜித் அவர்கள் அடுத்து  நடிக்க இருக்கும் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார்.

அதன் பிறகு அவர் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். முதலில் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு  பிறகு சில காரணங்களால் விலகி கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

முதலில் அஜித் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி என்னும் டைட்டில் மட்டுமே விடப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு  அந்த படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளிவராதா என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

அஜித் நடிப்பில் இறுதியில் வெளிவந்த படமானது  தளபதி விஜய் அவர்களின் வாரிசு படத்துடன்  இணைந்து வந்தது.வாரிசு படம் வெளிவந்த நிலையில் அதன்பிறகு அவர் லியோ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பின்பு அந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்பொழுது அந்த படமே திரைக்கு  வர இருக்கின்றது.

ஆனால் அஜித் அவர்களின் படம் குறித்து எந்த வித அப்டேட்டும் வெளி வரவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி குறித்த அப்டேட்டை விரைவில் வெளியிடுமாறு கேட்டு வருகின்றனர்.

இந்த இடைவெளி  அவர் தரமாக தயாராகி கொண்டு இருக்கிறார் என்றும் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
Parthipan K