ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!!

0
172
#image_title

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!!

1996 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “வான்மதி” மற்றும் விஜய்யின் “கோயம்புத்தூர் மாப்பிளை” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது.

1997 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “நேசம்” மற்றும் விஜய்யின் “காலமெல்லாம் காத்திருப்பேன்” என்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் சுமாராகத் தான் ஓடின.

1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அஜித்தின் “இரட்டை ஜடை வயசு” மற்றும் விஜய்யின் “காதலுக்கு மரியாதை” என்ற படங்கள் வெளியானது. இதில் விஜய்யின் “காதலுக்கு மரியாதை” படம் அதிக நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

1999 ஆம் ஆண்டு அஜித்தின் “உன்னைத்தேடி” மற்றும் விஜய்யின் “துள்ளாத மனமும் துள்ளும்” என்ற படங்கள் வெளியானது. இதில் விஜய்யின் “துள்ளாத மனமும் துள்ளும்” படம் அதிக நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

2000 ஆம் ஆண்டில் அஜித்தின் “உன்னை கொடு என்னை தருவேன்” மற்றும் விஜய்யின் “குஷி ” என்ற படங்கள் வெளியானது. இதில் விஜய்யின் “குஷி” படம் அதிக நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

2001 ஆம் ஆண்டில் அஜித்தின் “தீனா” மற்றும் விஜய்யின் “ப்ரண்ட்ஸ்” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களும் அதிக நாட்கள் ஓடி வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது.

2002 ஆம் ஆண்டில் தீபாவளிக்கு அஜித்தின் “வில்லன்” மற்றும் விஜய்யின் “பகவதி” என்ற படங்கள் வெளியானது. இதில் அஜித்தின் “வில்லன்” படம் அதிக நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

2003 ஆம் ஆண்டில் தீபாவளிக்கு அஜித்தின் “ஆஞ்சநேயா” மற்றும் விஜய்யின் “திருமலை” என்ற படங்கள் வெளியானது. இதில் விஜய்யின் “திருமலை” படம் அதிக நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் பொங்கலுக்கு அஜித்தின் “பரமசிவன்” மற்றும் விஜய்யின் “ஆதி” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

2007 ஆம் ஆண்டில் பொங்கலுக்கு அஜித்தின் “ஆழ்வார்” மற்றும் விஜய்யின் “போக்கிரி” என்ற படங்கள் வெளியானது. இதில் விஜய்யின் “போக்கிரி” படம் அதிக நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் பொங்கலுக்கு அஜித்தின் “வீரம்” மற்றும் விஜய்யின் “ஜில்லா” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களும் ஆவரேஜ் படமாக தான் பார்க்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் பொங்கலுக்கு அஜித்தின் “துணிவு” மற்றும் விஜய்யின் “வாரிசு” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களும் ஆவரேஜ் படமாக தான் பார்க்கப்பட்டது.