தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் ‘வாரிசு’ படத்தோடு போட்டிபோடும் ‘துணிவு’ ?

0
325

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்குமார், ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியாகவுள்ள படம் ‘துணிவு’. திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆக்ஷன் நிறைந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜான் கொக்கேன், மமதி சாரி, மகாநதி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக தமிழில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியாகப்போகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக ‘துணிவு’ படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை தயாரிப்பாளர் குழு ட்விட்டரில் ‘துணிவு’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இதன் மூலம் படம் தெலுங்கில் வெளியாவதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழில் படத்திற்கு ‘துணிவு’ என்றும், தெலுங்கில் படத்திற்கு ‘தெகிம்பு’ என்றும் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெகிம்பு வெளியீட்டு உரிமையை ராதா கிருஷ்ணா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் IVY புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளது. ஏற்கனவே பாக்ஸ் ஆபிசில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ படங்கள் மோதிக்கொள்வது ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தெலுங்கிலும் ‘வாரிசு’ படத்துடன் ‘துணிவு’ படம் மோதவிருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Previous articleராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!
Next articleஇவ்வாறு உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here