அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

0
190

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘வலிமை’. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை  படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி-யும், வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா-வும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வலிமை படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வலிமை திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். இதையடுத்து, பிப்ரவரி 24ம் தேதி வலிமை திரைபடம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் வெளியிட படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு  பின் கடந்த மூன்று ஆண்டுகளாக அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அஜித் ரசிகர்களின் மூன்று ஆண்டு காத்திருப்புக்கு பிறகு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே வலிமை திரைப்படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த அஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த புகைபடத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Previous articleபள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை! காரணம் என்ன?
Next articleநீங்க இந்த ராசியா? உங்களுக்கு அதிஷ்டம் கொட்டப்போகுது!