இப்படியும் ஒரு கதையா? சொல்லவே கூச்சமா இருக்கு! படம் எப்படி இருக்குமோ!!!

அனைத்து திரைப்படங்களும் அனைத்து வயது தரப்பினரும் பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி வரம்பு மீறி ஒரு சில அடல்ட் திரைப்படங்கள் வருகின்றன. அதற்கு A சான்றிதழ் அளித்து தடை விதிக்க படுகிறது.

 

ஆனால் இந்த யூடியூப் மற்றும் OTT – யில் எதையும் மறைப்பது கிடையாது. அப்படியே போட்டு விடுகிறார்கள். அடல்ட் படங்கள் கூட பதிவிட்டு சர்ச்சை எழுந்து விடுகிறது.அப்படி ஒரு படம் தான் அடுத்த வாரம் அமேசான் OTT தளத்தில் வெளிவர போகிறது.

 

அது ஒரு தெலுங்கு திரைப்படம். “ஏக் மினி கதா” என்பது படத்தின் பெயர். இந்த திரைபடத்தின் கதையை கேட்டால் சொல்ல கூட கூச்சமாக உள்ளது.

இந்த படத்தில் வரும் கதாநாயகனுக்கு ஆண் உறுப்பு அளவில் சிறியதாக உள்ளது. அதை பெரிதாக்கி கொள்ள அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கிறார் என்பது கதை தொடங்குகிறது.

 

கார்த்திக் ரப்போலு இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ படத்திற்குக் கதை எழுதிய மெர்லபகா காந்தி எழுதியிருக்கிறார். நல்ல கதை. சந்தோஷ் ஷேபான், காவ்யா தப்பார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மே 27ம் தேதி OTT தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது. என்ன ஆக போகிறதோ தெரியவில்லை. இதில் பேமிலி என்டர்டெயி்மென்ட் என விளம்பரம் வேறு.

 

Leave a Comment