cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.
இந்திய அணி நடைபெற்று வரும் மூன்றாவது ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்டில் ஒரு விக்கெட் மட்டும் உள்ள சூழலில் ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி ரன் சேர்த்தார் இதனால் பவுலிங்கில் ரோஹித் திட்டியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கருத்து.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்து வீசிய போது ஆகாஷ் தீப் பந்து வீசிய போது பந்து பிட்ச் க்கு வெளியே சென்றது உடனே ரோஹித் சர்மா உனக்கு மண்டைல ஒன்னும் இல்லையா என்று திட்டினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் ஃபாலோ ஆனை தவிர்க்க போராடிய போது கடைசியாக களமிறங்கிய பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இணை சிறப்பாக விளையாடியது. ஆகாஷ் தீப் பவுண்டரி சிக்சர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதை ரசிகர்கள் ரோஹித்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆகாஷ் தீப் என கூறி வருகின்றனர்.