அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!

0
215
Alas!.Sammy save us!!Drunken drug addicts who are intoxicated are big beetles!!
Alas!.Sammy save us!!Drunken drug addicts who are intoxicated are big beetles!!

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்த தண்டலச்சேரியில் அரசு  மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையின் தினமும் ஏராளமானோர் மதுபானத்தை  அருந்தி விட்டு செல்வார்கள்.இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செயல்பட்ட கடை  இரவு நேரம் என்பதால் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார் கடையில் விற்பனையாளர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி இரு கொள்ளையர்கள் மதுபான கடைக்குள் புகுந்துள்ளனர்.அந்நேரமாக பார்த்து நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.திடிரென்று மதுபான கடையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சத்தம் கேட்டது.

சந்தேகம் அடைந்த போலீசார்கள் கடைக்கு அருகே சென்றனர்.அப்போது போலீசார்கள் சுற்றி முற்றி பார்த்தபோது சுவற்றில் ஒரு பகுதியில் துளையிட்டு வெளிய வர முடியாமல் இரு கொள்ளையர்கள் மாட்டிக் கொண்டது தெரிந்தது.அவர்களின் ஒருவன் குடித்து குடித்து வயிறு உப்பியதால் வெளியே வரமுடியாமல் மாட்டிகொண்டான்.அவரின் ஒரு கால்களை இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.

இன்னொரு மது ஆசாமியை சட்டையை பிடித்து வெளியே எடுத்தனர்.இவர்களை பிடித்து போலீசார்கள் விசாரித்த போது அந்த இரு மது பிரியர்களும் தாங்கள் பீர் குடித்து வயிறு உப்பியதாலும் அதுமட்டுமல்லாமல் அதிக போதையில் இருந்துள்ளதாகவும் அதனால் தான் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார்கள்.

மேலும் அவர்களை விசாரித்த போலீசார்கள் சென்னை பள்ளிகரனையை சேர்ந்த சதீஸ் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பதும் தெரிய வந்தது.இவர்கள் இருவரும் மது கடையில் உள்ள சுவற்றை துளையிட்டு பணப்பெட்டியில் வைத்திருந்த 14000 ரூபாய் பணத்தையும் திருடியதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மதுபானத்திற்கு  ஆசை பட்டு மதுபாட்டிலை திருடிய போது போதை தலைக்கு ஏறியதால் சிக்கிக் கொண்டோம் என போலீசாரிடம் உளறினார்கள்.பின்னர் இவர்களை இருவரையும் போலீசார் கைது செய்து கவரைப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!
Next articleபிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து!