கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
152

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில்,காலி மது பாட்டில்களை திரும்பி பெரும் திட்டத்தை சோதனை முறையில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று,காலி பாட்டிலை கொடுக்கும் பொழுது இந்த கூடுதல் பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

அதாவது சோதனை முறையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15ஆம் தேதி முதல் இரண்டு மாதத்திற்கு மது பாட்டில்களின் மீது பத்து ரூபாய் கூடுதலாக விற்று காலி பாட்டிலை திரும்ப கொடுப்போருக்கு அந்த பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த ஆய்வறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை அறிக்கையின் அடிப்படையில் இந்த திட்டமானது தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Previous articleATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!
Next articleஎம்பிபிஎஸ் மாணவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!