எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
79

1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப் பணியிடங்கள்: 1021

நேற்றைய தினம் தொடங்கிய விண்ணப்ப செயல் முறையானது வரும் 25ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.

சம்பள விவரம்: 56,100 முதல் 1,77,500 வரையில் ( நிலை-22)

கல்வித் தகுதி:

மருத்துவர் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடநெறியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

12 மாதங்களுக்கு குறையாமல் சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் கீழ் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும்.

Www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம் 1000 ரூபாய் ஆகும் பட்டியல் இனத்தவர் பட்டியலின அருந்ததியினர், பழங்குடியினர் உள்ளிட்டோர் நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

தமிழ் மொழி தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

வயதுவரம்பு கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி அடிப்படையில் பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு விண்ணப்பதாரர்கள் 59 கீழ் இருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் 37க்கு கீழ் இருக்க வேண்டும்.

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் குறித்து கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி வெளியிட்ட ஆள் சேர்க்கை அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பம் செய்த தேர்வர்கள் மீண்டும் தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் தற்போது மீண்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று சொல்லப்படுகிறது.