8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!
கடந்தவாரம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சில மாணவர்கள் செய்த செயல் பள்ளியில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே குடித்துக் கும்மாளம் போட்டு உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் உட்பட பள்ளி நிர்வாகிமே அதிர்ந்து போய்விட்டது.
மேலும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களிலும் வைரலாகி விட்டது. அதன் காரணமாக பள்ளி நிர்வாகம் அவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளது. அந்த மாணவர்கள் ஏற்கனவே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என தற்போது தெரிய வருகிறது. அதன் காரணமாக அவர்களுக்கு மது வாங்க வேண்டி மற்ற மாணவர்களிடம் சில குறிப்பிட்ட தொகையை அவர்கள் கேட்டு வாங்கி உள்ளனர்.
மற்ற மாணவர்கள் எல்லாம் மதிய உணவு இடைவேளையின் போது உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, இவர்கள் மட்டும் மது குடித்துவிட்டு வகுப்பறையில் நடனமாடி அதை வீடியோவும் எடுத்துள்ளனர். பிற மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரிவித்ததையடுத்து மாணவர்களின் பைகளை சோதனை செய்ததில் இரண்டு மது பாட்டில்களும் புத்தகங்களுடன் சிக்கியது.
அதைத் தொடர்ந்து மது அருந்திய ஐந்து மாணவர்களும் வகுப்பில் இல்லாத நேரத்தில் ஆசிரியர்கள் அவர்களது பள்ளிகளை திறந்து பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். அதிலும் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். மேலும் இதில் நான்கு மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள் என்றும், மற்றொரு மாணவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தலைமை ஆசிரியருக்கு விஷயம் தெரியவரவே அவர் அவர்களது பெற்றோரை அழைத்து நடந்த சம்பவத்தை தெரிவித்ததோடு, மேலும் தங்களது பள்ளியை விட்டு சென்று விடுமாறு கூறி பள்ளி இடமாற்ற சான்றிதழ் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் மற்ற குழந்தைகளையும் கெடுத்து விடக் கூடும் என்ற அபாயம் உள்ளதால் வேறு பள்ளிக்கு அழைத்துச் செல்லும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற மாணவர்களை பாதுகாக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் உரிமை அமைப்பாளர் திவ்யா திஷா சைல்டுலைனின் இயக்குனர் இசிடோர் பிலிப்ஸ், கூறும்போது ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். மாணவர்களை வெளியேற்றுவதன் மூலம் பள்ளி வெறுமனே தனது கைகளை கழுவி விட முடியாது என்றும், பள்ளி சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பதிவு செய்த ஒவ்வொரு மாணவரையும் கண்காணிக்கும் பொறுப்பும் பள்ளிக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஒரு மாணவன் வளர்ந்து நிற்பதற்கு தேவையான உதவிகளை மாணவனின் குடும்பம் மற்றும் பள்ளி ஆகிய இரண்டுமே சேர்ந்துதான் செய்ய வேண்டும் என்றும், அவை இரண்டும் சேர்ந்து தான் மாணவனின் வளர்ச்சியில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கூறினார். மாணவர்களை வெளியேற்றுவதற்கு பதில் தவறான நடத்தைகளை தடுக்க பள்ளியில் சிறந்த ஆலோசனைகள் மற்றும் மனநல ஆலோசனைகளை கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.