இன்று பெரும்பாலானோர் வலி நிவாரணி மாத்திரை மற்றும் வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.வலி நிவாரணிகளை பயன்படுத்தினால் உடல் வலி,தலைவலி,பல் வலி போன்ற பாதிப்புகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.
இதனால் ஆஸ்பிரின்,நாப்ராக்ஸன் போன்ற வலி நிவாரணிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் அவை நமக்கு பாதகமாக மாறிவிடும்.வலி நிவாரணி மருந்து மாத்திரைகள் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
நம் இந்தியவர்கள் வலி நிவாரணி மாத்திரையை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.அடிக்கடி வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்டால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.மாரடைப்பு,பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படுகிறது.
வலி நிவாரணி மாத்திரை அலர்ஜியை உண்டாக்கிவிடும்.ஆண்களைவிட பெண்களே அடிக்கடி வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது.பாலூட்டும் தாய்மார்கள்,கர்ப்பிணி பெண்கள் வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
சில வகை வலி நிவாரணி மருந்துகள் நெஞ்செரிச்சல்,வயிற்று வலி,ஒவ்வாமை,காது சம்மந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.வலி நிவாரணி மாத்திரைக்கு பதில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இஞ்சி,மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் பானம் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.மூலிகை
பானங்களை பருகலாம்.உடல் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.இதனால் வலி நிவாரணி மாத்திரை மற்றும் மருந்துகளின் தேவையை குறைக்க முடியும்.