அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!!

Photo of author

By Pavithra

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!!

Pavithra

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!!

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் உறவினர்கள் நண்பர்கள் ஒருவருகொருவர் வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்புவது வழக்கம்.

ஆனால் தற்போது இது போன்ற பண்டிகை வாழ்த்துக்கள் மூலம் மால்வேரை பரப்பி உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு,பிரபல நகைக்கடையின் ஒரிஜினல் லோகோவை திருடி அந்த நகைக்கடையை போன்றே,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் பெயரில் ஆஃபர் உள்ளது.இந்த ஆஃபரிணை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பெண்கள் இது ஒரிஜினல் நகை கடை விளம்பரம் என்று நினைத்து அந்த லிங்கை கிளிக் செய்து கேட்கப்பட்ட விவரங்களுக்கு பதிலளித்து விட்டால் உங்கள் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்து பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது.

எனவே இது போன்று தெரியாத நம்பரில் இருந்து அல்லது நகைக்கடை மெசேஜ் போன்ற ஆபர் மெசேஜ்கள் வாழ்த்து மெசேஜ் போன்றவற்றை கிளிக் செய்யாமல் அதனை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாணை இணைய பாதுகாப்பு குழு எச்சரித்துள்ளது.

இந்த போலி மெசேஜ் நகைக்கடை விளம்பரம் மட்டுமல்ல புட் ஆர்டர்,அமேசான் பிளிப்கார்ட் ஆர்டர் போன்ற ஆன்லைன் ஆப்புகளின் லோகோவை பயன்படுத்தி ஆஃபர் வெளியீட்டு பணம் கொள்ளை அடிக்க படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.