பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

0
105

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

இந்திய அணியில் பூம்ரா இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் அனுபவம் மிக்க ஷமி அணியில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் முதுகெலும்பாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூம்ரா. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இல்லை. ஆசியக் கோப்பை தொடரை இந்தியா இழந்தததற்கும் பூம்ரா இல்லாததே காரணம் என்று சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அவருக்கு பதில் அனுபவம் மிக்க முகமது ஷமி அணியில் இணைக்கப் பட்டுள்ளார். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் அவரின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷமியைப் பற்றி பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “ஷமி அனுபவம் மிக்க வீரர். அவர் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். பூம்ரா இல்லாத போதே அவருக்கு மாற்றாக அனுபவம் மிக்க வீரர்தான் வேண்டும் என நினைத்தோம். பூம்ராவின் இடத்தை ஷமி நிரப்புவார்.அவர் புதிய பந்துகளை திறம்பட வீசுவார். இப்போது அவருக்கு போதிய அனுபவமும் கிடைத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆஸி அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இறுதி ஓவரை வீசிய ஷமி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி 4 பந்துகளிலும் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.