டீ விரும்பிகளுக்கு அலர்ட்!! பெரும் ஆபத்து கட்டாயம் இதை மட்டும் குடிக்காதீர்கள்!!

Photo of author

By Rupa

உங்களில் பலருக்கு தினமும் டீ அல்லது காபியுடன் அன்றைய தினத்தை தொடங்கும் வழக்கம் இருக்கும்.நம் இந்தியாவில் டீ விரும்பிகள் எண்ணிக்கை அதிகம்.டீ சுவையாக இருக்க டீத்தூள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் காரணமாக பெரிய கார்பிரேட் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக டீத்தூளை பேக்கில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.இன்று பெரும்பாலான வீடுகளில் டீ பேக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

இந்த டீ பேக்ஸை வெந்நீரில் போட்டு மிக்ஸ் ஆனதும் குடிக்கலாம்.இதனால் டீ போடுவது எளிதாகவும்,அதிக சுவையாக இருந்தாலும் அதில் அதிக ஆபத்துகள் நிறைந்திருக்கிறது.டீ பேக்கில் எபிகுளோரோஹைட்ரின் என்ற வேதிப்பொருள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இந்த பேக்கை உடைக்காமல் அப்படியே டீ போட பயன்படுத்துவதால் அதிலுள்ள வேதிப்பொருள் உடலில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.

டீ பேக்ஸில் உள்ள டயாக்ஸின் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கிறது.சில வகை டீ பேக்ஸ்களில் காஃபின் உள்ளிட்ட சில பொருட்கள் கலக்கப்படுகிறது.இது தெரியாமல் அந்த பிராண்டுகளை பயன்படுத்தினால் புற்றுநோய் செல்கள் உருவாகிவிடும்.

மைக்ரோ பிளாஸ்டிக் டீ பேக்ஸை பயன்படுத்தினால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். க்ரீன் டீ பேக்குகளை அடிக்கடி குடிப்பதால் தேயிலை கசடுகள் உடலில் நுழைந்து தீங்கு விளைவித்துவிடும்.

இதன் காரணமாக டீ பேக்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்து தேயிலை தூள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட டீயை பருக வேண்டுமென்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.