அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

Photo of author

By Divya

அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

Divya

நெல்லிக்காய் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த கனியாகும்.நெல்லிக்காயில் சிறிய நெல்லி,பெரிய நெல்லி என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் சிறு நெல்லி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டது.பெரிய நெல்லி துவர்ப்பு,புளிப்பு,சிறிது இனிப்பு சுவை கொண்டது.இரண்டு நெல்லியும் வைட்டமின் சி சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது.

வைட்டமின் சி சத்து நிறைந்த காய்களில் இதுவும் ஒன்றாகும்.பெரிய நெல்லி தலை முதல் பாதாம் வரையிலான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.மற்ற கனிகளை ஒப்பிடுகையில் இந்த காயில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.நெல்லிக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.நெல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளன்னு மாறும்.

நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.குடலில் தேங்கிய கழிவுகள் வெளியேற நெல்லிக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.தினமும் நெல்லி ஜூஸ் சாப்பிட்டு வந்தால் முடி கருமையாக வளரும்.

உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.எவ்வளவு நன்மைகளை நமக்கு தரும் நெல்லியின் மறுப்பக்கம் தெரிந்தால் அதிர்ந்துபோயிடுவீங்க.நெல்லிக்காயை காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.சிலருக்கு பெரிய நெல்லிக்காய் ஒவ்வாமை பிரச்சனையை உண்டாக்கும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு சைனஸ் பிரச்சனை ஏற்படும்.

நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணப் பிரச்சனை உண்டாகும்.நெல்லிக்காயின் புளிப்பு சுவை பல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனை உண்டாகும்.நெல்லி ஜூஸ் அலர்ஜி இருப்பவர்கள் தேனில் நெல்லிக்காய் ஊறவைத்து சாப்பிடலாம்.நெல்லிக்காயை பொடித்து தண்ணீர் அல்லது தேனில் மிக்ஸ் செய்து சாப்பிடலாம்.