Alert: உங்க whatsapp ல இப்படி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க!! சைபர் கிரைம் அறிவுறுத்தல்!!

0
46
Alert: If you receive a message like this on your WhatsApp, be careful!! Cybercrime warning!!
Alert: If you receive a message like this on your WhatsApp, be careful!! Cybercrime warning!!

சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய முறையை பயன்படுத்தி தங்களுடைய கொள்ளை முயற்சிகளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை உறுதி செய்த சைபா க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு whatsappபில் வங்கி சம்பந்தப்பட்டு வரக்கூடிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பொதுவாக நம் அனைவரின் உடைய செல்போன்களிலும் whatsapp குழுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற whatsapp குழுக்களில் பொதுவான ஒரு குறுஞ்செய்தி அதுவும் வங்கி சம்பந்தப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அதில் இருக்கக்கூடிய லிங்கை தவறுதலாக தொடும் பட்சத்தில் செல்போன் முழுவதும் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருக்கக்கூடிய பணம் முழுவதும் சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்படும் என்றும் சைவ போலீசார் எச்சரித்து இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்த குறுஞ்செய்திகள் SBI, ICICI, IOB போன்ற மிகப்பெரிய வங்கிகளில் இருந்து உங்களுடைய கணக்கு மூடப்படும் என்பது போலவோ அல்லது குறைந்த இருப்பு மட்டுமே இருப்பதால் வங்கி கணக்கு மூடப்படுகிறது என்பது போலவோ குறுஞ்செய்திகள் வரும் பட்சத்தில் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் உங்களுடைய வங்கி கணக்குகள் குறித்த சந்தேகங்களை நேரடியாக வங்கிக்கு சென்று தீர்த்துக் கொள்ளும் படியும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருக்கின்றனர்.

Previous articleசட்டுனு வீட்டுக் கடனை கட்டி முடிக்க!! இந்த 1 வழியை பின்பற்றினால் போதும்!!
Next articleஆசைப்பட்டது குத்தமா.. பல கோடி சொத்து போச்சே!! புலம்பும் நடிகர் விமல்!!