Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

Photo of author

By Pavithra

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

Pavithra

Alert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

படித்தவர்கள் படிக்காதவர்கள் போன்ற பலரிடமும் ஏடிஎம் கார்டுகள் தற்போது உள்ளன.ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பல பேர் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பிறந்த நாள் வண்டி நம்பர் அல்லது வருடம் இதுபோன்று மூன்றாவது நபர்கள் எளிதில் வியூகிக்கக்கூடிய pin நம்பர்களையே வைத்திருக்கின்றோம்.
வங்கிகள் சார்பில் கூட இது போன்ற பிறர் எளிமையாக கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
இருப்பினும் பலர் இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகளை வைத்திருக்கின்றன.

அவ்வாறு எளிதாக ஏடிஎம் கடவுச்சொல் வைத்திருப்பவர்களுக்கான ஓர் உதாரண செய்தி தான் இது.திருவண்ணாமலையைச் சேர்ந்த ரேவதி என்னும் பெண் ஒருவர் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார்.அங்கு அவரது கைப்பையை தொலைத்துள்ளார்.அந்தப் பையனுள் இருந்த ஆதார் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகளை கைப்பற்றிய கொள்ளையர்கள்,ஆதார் கார்டில் இருந்த அந்தப் பெண்ணின் பிறந்த தேதியை ஏடிஎம் பாஸ்வேர்டாக போட்டுள்ளனர்.அந்தப் பெண்ணின் ஏடிஎம் பாஸ்வேர்ட் அவரின் பிறந்த தேதியாக இருந்ததனால் அந்த கொள்ளையர்கள் அவரின் அக்கவுண்டில் இருந்து 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக அப்பெண் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.அந்த ஏடிஎம் கார்டையும் வங்கி தரப்பில் முடக்கப்பட்டுள்ளது.