மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!!

0
230

மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!!

தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களையும் இணையதள முகவரியையும் சிபிஐ முடக்கி வருகின்றன.
தற்போது இந்த நிகழ்வினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் உலாவி வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது ரேண்டம் தொலைபேசி எண்ணிற்கு ஃபோன் செய்து அவர்களிடம் நாங்கள் காவல்துறை அதிகாரிகள் பேசுகின்றோம் என்று கூறி,நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களை மிரட்டுவதாகவும்,நடவடிக்கை எடுக்காமல் இருக்க நீங்கள் 1000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டி,மக்களிடமிருந்து நுதனமாக பணம் பறிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.காவல்துறை சார்பில் இது போன்ற எந்த விதமான தொலைபேசி அழைப்புகளும் வராது என்றும் எனவே இதுபோன்று கூறுபவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

Previous articleAlert: உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!
Next articleதமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here