மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று எச்சரிக்கை!!
இந்தியாவில் தற்போதைய சுழலில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது, இருப்பினும் கொரோனா வைரஸ் பல வடிவங்களில் பரவுகிறது.
குறிப்பாக பிப்ரவரியில் குறைவாக இருந்த கொரோனா பரவல் மார்ச் மாதத்தில் சற்று அதிகமாக உள்ளது, குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது.
இந்நிலையில்தான் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த பெரியவர்களுக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கான்ஜுக்டிவிடிஸ் எனப்படும் ஒரு வித கண் பாதிப்பு நோய் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு கண்கள் இளஞ்சிவப்பாக மாறுகிறதாம், இது நமது கண்ணில் வெள்ளைப்பகுதியையும், கண் இமையின் உட்புறத்தையும் வரிசைப்படுத்தும் மெல்லிய அடுக்காகும்.
மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்க பட்டவர்களுக்கு 60 சதவிகிதம் பேருக்கு தொண்டை வலியும் இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் எக்ஸ்.பிபி 2.3 என்று கூறுகின்றனர்.
நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,300 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உட்பிரிவு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.