செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி!

0
103
#image_title

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி!

செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை தொடங்க ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் பொருள் பார்சல் முன்பதிவு கவுன்டர்களில் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, உங்கள் வீட்டிலிருந்து உங்கள் செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஏசி-1 வகுப்பு ரயில்களில் செல்லப்பிராணிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வது பயணிகளுக்கு வசதியாகவும் இருக்கும் .

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் CRIS நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட SLR கோச்சில் விலங்குகள் வைக்கப்படும். விலங்குகளின் உரிமையாளர்கள் ரயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம்.

இருப்பினும், ஆன்லைனில் செல்லப்பிராணிகளுக்கானடிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

பயணியின் டிக்கெட் முதலில் உறுதியாகி இருக்க வேண்டும். பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.

ரயில் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாகினாலோ, விலங்குகளுக்கான டிக்கெட் கட்டணமும் திருப்பி அளிக்கப்படாது. பயணிகளின் பயணச்சீட்டு மட்டும் திருப்பி அளிக்கப்படும்.

author avatar
Savitha