மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!
சமீபகாலமாகவே பறவை காய்ச்சல் ஆனது தீவிரம் காட்டி வரும் நிலையில் கேரளா நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கோழிகள் மற்றும் வாத்துகள் பாதிப்படைந்து வருகிறது.அந்த வகையில் கேரளா மற்றும் நீலகிரி எல்லை தாண்டி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பறவை காய்ச்சலானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கிட்டத்தட்ட தற்பொழுது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் வாத்துக்கள் பாதிப்படைந்தும் சிலவற்றை இருந்தும் விட்டது.தொற்று பாதிப்படைந்த பகுதியிலிருந்து வேறொரு மாநிலத்திற்கு பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தமிழ்நாட்டிற்கு பறவை காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
குறிப்பாக ஹெச்5என்1 என்ற பாதிப்பு உண்டாகும் என தெரிவிக்கின்றனர்.உலக சுகாதார நிறுவனம் இந்த பறவை காய்ச்சல் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.அது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த பறவை காய்ச்சலானது அமெரிக்கா போன்ற மாகாணங்களில் மாடுகளுக்கும் பரவியுள்ளதாகவும் மேற்கொண்டு அது கறக்கும் பாலில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாலை சுத்திகரிக்கப்படாமல் குடித்தால் கட்டாயம் மனிதர்களுக்கும் இந்த பறவை காய்ச்சல் பரவி இறக்க கூட நேரிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.இவ்வாறான அறிவிப்பிற்கு பிறகு மாநிலமெங்கும் பறவைக்காய்ச்சல் நடவடிக்கையானது தீவிர படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழகத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிப்பதோடு 12 சோதனை சாவடிகள் அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.