மக்களே அலர்ட்.. ஏசி ரூமில் தூங்குபவர்களுக்கு கட்டாயம் இந்த வியாதிகள் வரும்!!

Photo of author

By Divya

மக்களே அலர்ட்.. ஏசி ரூமில் தூங்குபவர்களுக்கு கட்டாயம் இந்த வியாதிகள் வரும்!!

முந்தைய காலத்தில் காற்றிற்காக ஜன்னலை திறந்து வைத்து உறங்கி வந்தோம்.இதனால் இயற்கையான காற்றை சுவாசித்து நிம்மதியான உறக்கத்தை அனுபவித்தோம்.ஆனால் இன்றைய நவீன காலத்தில் ஜன்னல்களை அடைத்து வைத்து ஏசி காற்றில் நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

கோடை காலங்களில் வீட்டில் அதிகப்படியான வெப்பம் நிலவுவதால் குளிர்ந்த காற்று கிடைக்க நிறைய வீடுகளில் AC பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஏசி காற்றில் உறங்க பழகி கொண்டோம் என்றால் சாதாரண வெயிலை கூட நம் சருமம் தாங்காது.

ஏசி காற்று நமது சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி சரும வறட்சியை உண்டாக்கும்.ஏசி அறையில் உறங்குவதால் சுவாசப் பிரச்சனை ஏற்படும்.ஆஸ்துமா,ஒவ்வாமை,சுவாச மண்டலத்தில் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அதிக நேரம் ஏசி காற்றில் தூங்குவதால் இதயப் பகுதியில் இறுக்க உணர்வு ஏற்படும்.ஏசி காற்று தோல் அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.சிறிய அறையில் ஏசி போட்டு தூங்குவதால் உடல் அதிக நேரம் குளிர்ந்த வெப்பநிலையில் இருக்கும்.இதனால் மூட்டு வலி,தசை விறைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அது மட்டுமின்றி குளிர்ந்த காற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்து பாக்டீரியா,வைரஸ் தொற்றுக்கள் நமது உடலிற்குள் எளிதில் நுழைந்துவிடும்.ஏசி அறையில் தூங்குவதால் நமது தூக்க முறைகள் முழுமையாக மாறிவிடும்.குளிர்ந்த காற்றால் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்க நேரிடுகிறது.ஏசி காற்றால் கண் எரிச்சல்,மங்கலான பார்வை,கண் அரிப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும்.எனவே நீண்ட நேரம் ஏசி அறையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.