இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.அந்த ரயிலானது இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

மேலும் ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று கீழே ஓடியது.அதனை கண்ட ரயில் என்ஜின் டிரைவர் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திய பிறகு ரயில்  பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சரக்கு ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக வேறு எந்த ரயிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் விசாகப்பட்டினத்திலிருந்து விஜயவாடா பயணிகள் ரெயில் ,விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம்  செல்லும் ரயில் ,குண்டூர் விசாகப்பட்டினம் ,காக்கிநாடாவில் இருந்து விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது .பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் செல்லும் ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள் ,கல்லூரிக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.அதனையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டி சீர் செய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

Leave a Comment