போக்குவரத்து கழகங்கள் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் தவறானது! கூடுதல் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம்!

0
109

போக்குவரத்து கழகங்களின் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை டயர் பற்றாக்குறையின் காரணமாக பாதிக்கும் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் எந்தவிதமான உண்மையும் அல்ல என்று கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா.

தமிழக போக்குவரத்து கழகங்களில் டயர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக, தீபாவளிக்கு தடை இல்லாத பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் மற்ற போக்குவரத்து கழகங்களால் இயலாத சூழ்நிலை உண்டாகும் என உண்மை நிலையை உறுதி செய்யாத செய்தி வெளியாகியிருக்கிறது.

புதிய டயர்கள் மற்றும் ரீட்ரேடிங் பொருட்களின் தற்போதைய இருப்புநிலை போக்குவரத்து கழகங்கள் எல்லா பேருந்துகளையும் இயக்க தேவையான டயர் புளேட்டை விடவும் அதிகமாக இருக்கிறது.. ஆகவே தடையில்லாமல் பேருந்துகளை இயக்க முடியும் 15 ஆயிரத்து 997 புதிய டயர்கள் கடந்த மே மாதம் முதல் தற்போது வரையில் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஆயிரம் டயர்கள் போக்குவரத்து கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும் நிலையில் இருக்கிறது. தற்சமயம் தற்போதைய நிலையில், எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏதுவான நிலையில் உள்ளதை இது காட்டுகின்றது. பழைய டயர்களை ரீட் ரெடிங் செய்ய டிரீட் ரப்பர் இனைப்பு கோந்து,, பிவிசி உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பில் இருக்கின்றன என தெரிவித்திருக்கிறார்.

அரசு போக்குவரத்து கழகங்கள் இடம் எல்லா பேருந்துகளையும் முழுமையாக இயக்க தேவையான டயர்கள் மற்றும் ரீட் ரெடிங் பொருட்கள் போதுமான அளவுக்கு உலகம் தற்சமயம் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து பேருந்துகளை சிறப்பாக சிறப்பு பேருந்துகளையும் சீராக இயக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்