நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

0
180

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்‌. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர்-13ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Previous articleபோக்குவரத்து கழகங்கள் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் தவறானது! கூடுதல் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம்!
Next articleசுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here