யாதும் ஊரே யாவரு கேளீர் என்ற உணர்வோடு இந்தியர்கள் அனைவரும் வாழ்கின்றனர்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

0
171
#image_title

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உணர்வைக் கொண்டு இந்தியர்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.

மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இன்று தொடங்கியது.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் மேலும் இந்தியக் கலாசார ஒற்றுமையை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இன்று முதல் வரும் 30 ம் தேதி வரை நடைபெற உள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

துவக்க நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேல், மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துவக்க நிகழ்வை முன்னிட்டு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் உரையாற்றிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை போல சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் சொன்னதை பிரதமர் மோதி நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத்சிங் தேசப் பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பை போல கலாச்சார பாதுகாப்பும் மிக முக்கியமானது என தெரிவித்தார்.

வங்க கடல் அரபிக் கலரோடு எப்படி கலைக்கிறதோ அதே போல சௌராஷ்ட்ரா மக்கள் தமிழகத்தோடு கலந்து வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்தவர் சௌராஷ்டிரா தமிழர்கள் ஆனாலும் குஜராத் தமிழர்களாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை கொண்டிருக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

யூதர்கள் பாரசீகர்கள் முஸ்லிம்கள் என யாராக இருந்தாலும் அனைவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வுடன் இந்தியாவில் இந்தியர்கள் அனைவரும் வசித்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Previous articleவீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!
Next articleதமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!