கிட்னி தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாக.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!

Photo of author

By Rupa

உடலின் முக்கிய உள்ளுறுப்பாக திகழும் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிவது சற்று கடினமான ஒன்று.

சிறுநீரை கழிக்காமல் இருப்பது,தண்ணீர் குடிக்காமல் இருப்பது,சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக நோய்கள் உண்டாகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட இயற்கை மருத்துவம் கைகொடுக்கும்.

1)தனியா விதை – ஒரு ஸ்பூன்
2)சீரகம் – 1/2 ஸ்பூன்
3)தண்ணீர் – 1 கிளாஸ்

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் தனியா விதையை இடித்து சேர்க்கவும்.அடுத்து அரை ஸ்பூன் சீரகத்தை இடித்து சேர்க்கவும்.இதை கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதால் கிட்னியில் தேங்கிய அழுக்கு,கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

1)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
2)தேன் – ஒரு ஸ்பூன்

ஒரு கிளாஸில் எலுமிச்சை சாறை பிழிந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகிவிடும்.

1)பூண்டு – ஒரு பல்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு ஸ்பூன்

ஒரு பல் வெள்ளை பூண்டை தோல் நீக்கி தட்டி வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு சிறிதளவு தேன் கலந்து குடித்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

1)வாழைத்தண்டு – ஒரு கப்
2)எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

ஒரு கப் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.